Monday, June 13, 2011

உன் மௌன வலையில்
சிக்கித்தவிக்கும் மீன் நான்
அறுத்து எறி என்னை
அல்லது உன் வலையை.

Wednesday, June 8, 2011

நிசப்த இரவுகளில்
என் உறக்கத்தை 
கலைக்கின்றன் 
உன் மௌனங்கள்

Wednesday, June 1, 2011


என் ஐம்புலன்களையும் திறக்கும்
சாவி உன்னிடம் இருக்கும் போது
உன் இதயத்தை திறக்கும் ஒற்றை
சாவியை தொலைத்ததெப்படி ?

Monday, May 2, 2011

நீ கண்ணிமைக்கின்றாய்
பஞ்ச பூதங்களும் உனக்கு
பண்ணமைக்கின்றன


Monday, February 14, 2011

நீ விழல் என
தெரிந்தும் இறைத்துக்
கொண்டிருக்கிறேன்
என் கண்ணீரை
நான் ஒற்றையடிப்பாதை
நீ நாற்சக்கர வண்டி
உன் நினைவுகள்
எனை விட்டு ஓடாமல்
இருக்கவே இக்
கண்ணீர்க் கயிறுகள்

Sunday, February 13, 2011

இதோ
என் கண்ணீர்
உன் பாவங்களைக்
கழுவிக்கொள்

நீ புன்னகையால்
தொடங்கிய விளையாட்டை
நான் கண்ணீரால்
முடிக்கின்றேன்

Saturday, February 12, 2011

அவன் பார்வையில் நான்
செதுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறேன்
உளியே இல்லாமல் சிலை செய்யும் கலை
அவன் விழி மட்டுமே அறியும்

Friday, February 11, 2011

நீ தந்தி அறுந்த வீணை
நான் யாசிப்பது இராகங்களை
நீ பனக்காட்டு நரி
 சலசலப்பு என்ன
என் கதறல் கூட
எடுபடாது உன்னிடம்
என் வார்த்தைகளும்
உன் மௌனங்களும்
புணர்ந்ததில் பிறந்ததே
இந்தக் கண்ணீர்
நாதமே இல்லாமல்
வீணை அதிர்கிறது
அவள் கண்ணசைவில்

Thursday, February 10, 2011

நீ படைக்கப்பட்டாய்
நான் புதைக்கப்பட்டேன்
உனது வீணையில்
முகாரி மட்டுமே
மீட்டப்படுகிறது
வாசலில் நீ
கோலமிடுகிறாய்
அலங் கோலமாகிறது
என் வாழ்வு
இதோ என் இதயம்
உதைத்து விளையாடு
உடைத்து விளையாடு
தொலைத்து மட்டும் விடாதே

Wednesday, February 9, 2011

நீயறியாமல் நான்
களவாடிய பொழுதுகள் தான்
இன்றும் நானறியாமல்
என்னைக் களவாடிக் கொண்டிருக்கிறது






பருவம் உன்னில்
பல்லாங்குழி ஆடி
என்னை படுகுழியில்
தள்ளிக்கொண்டிருக்கிறது