இதோ
என் கண்ணீர்
உன் பாவங்களைக்
கழுவிக்கொள்
நீ புன்னகையால்
தொடங்கிய விளையாட்டை
நான் கண்ணீரால்
முடிக்கின்றேன்
அவன் பார்வையில் நான்
செதுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறேன்
உளியே இல்லாமல் சிலை செய்யும் கலை
அவன் விழி மட்டுமே அறியும்
நீ தந்தி அறுந்த வீணை
நான் யாசிப்பது இராகங்களை
நீ பனக்காட்டு நரி
சலசலப்பு என்ன
என் கதறல் கூட
எடுபடாது உன்னிடம்
என் வார்த்தைகளும்
உன் மௌனங்களும்
புணர்ந்ததில் பிறந்ததே
இந்தக் கண்ணீர்
நாதமே இல்லாமல்
வீணை அதிர்கிறது
அவள் கண்ணசைவில்