நீ கண்ணிமைக்கின்றாய்
பஞ்ச பூதங்களும் உனக்கு
பண்ணமைக்கின்றன
நீ விழல் என
தெரிந்தும் இறைத்துக்
கொண்டிருக்கிறேன்
என் கண்ணீரை
நான் ஒற்றையடிப்பாதை
நீ நாற்சக்கர வண்டி
உன் நினைவுகள்
எனை விட்டு ஓடாமல்
இருக்கவே இக்
கண்ணீர்க் கயிறுகள்
இதோ
என் கண்ணீர்
உன் பாவங்களைக்
கழுவிக்கொள்
நீ புன்னகையால்
தொடங்கிய விளையாட்டை
நான் கண்ணீரால்
முடிக்கின்றேன்
அவன் பார்வையில் நான்
செதுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறேன்
உளியே இல்லாமல் சிலை செய்யும் கலை
அவன் விழி மட்டுமே அறியும்